
மக்களின் வாக்குகளால் ரணில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ளவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளானதால், மக்கள் தற்போது மிகவும் கஷ்டங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனுப்பும் பணத்தை செலவுகளுக்காக சமாளிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை முன்னேற்ற போவதாக கூறுகிறார்.
செலவிடப்படுவது ரணில் விக்ரமசிங்க சேமித்த டொலர்கள் அல்ல. நாடு இன்னும் கடனை திரும்ப செலுத்தவில்லை. அப்படியானால் நெருக்கடி அதே இடத்திலேயே இருக்கின்றது.
அமைச்சு பதவிகள் கிடைக்காத மொட்டுக்கட்சியினர் ரணில் விக்ரமசிங்கவை விமர்சிக்கின்றனர். ஜனாதிபதி அமைச்சு பதவி கிடைக்காத மொட்டுக்கட்சியினர் பிணை கைதி.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தை கடத்தி வந்த நிலையில் சிக்கினார்.
70 லட்சம் ரூபா செலுத்தி அவர் விடுதலையானார். அந்த பணம் எங்கிருந்து வந்தது. அவர் மீண்டும் முக்கிய பிரமுகர்களுக்காக முனையத்தின் ஊடாக வெளிநாடு சென்றார்.
அருந்திக பெர்னாண்டோ இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாதவரை நாட்டுக்குள் வரவழைக்கின்றார்.
அவருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
துள்ளும் நபர்களை அச்சுறுத்தி ஏமாற்றுவதில் ரணில் விக்ரமசிங்க திறமையானவர். இந்த உடன்பாட்டு அரசியலை முடிவுக்கு கொண்டு வர மக்கள் ஒன்று சேருவார்கள்.
நாங்கள் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை உருவாக்குவோம். கொழும்பை முற்றுகையிட போகிறோம் என்று கூறும் போது ராஜபக்சவினர் அஞ்சுகின்றனர்.
கொழும்பை முற்றுகையிட போவதாக ரணிலுக்கு ஆதரவளிப்போர் கூறுகின்றனர்.
ரணில் விக்ரமசிங்க மக்களின் வாக்குகள் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. நாங்கள் மக்கள் ஆணையின் மூலம் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்வோம் எனவும் சமிந்த விஜேசிறி மேலும் தெரிவித்துள்ளார்.