
இது ஒரு வரம்!
மங்கையர் தினமதில்
மானிடராய் பிறப்பதே வரம்!!
அதிலும் மங்கையராய் பிறப்பதே மகா தவம்..!!
வலிகளையும் வழிகளாய் மாற்றி சரித்திரம்
படைக்கும் நம் பெண்கள் -நம்
இனம் என்பதில் சொல்லற்ற மிடுக்கு!!..
ஓர் இனம் உருவாக வழி செய்கிறாள்..
பல கணமும் வலி பொறுக்கிறாள்..
வீழ்கின்ற போதெல்லாம்
தன்னைத்தானே தோள் தட்டிக் கொடுத்தும்
எழுந்து நின்றும் சாதனை தொடுக்கின்றாள்..
எண்ணற்ற சாதனைகள்
விளையாட்டு துறையிலும் சரி
விண்வெளியிலும் சரி.. ஏன்,
கல்வித் துறையிலும் கூட..
பல இன்னல்களையும்
தகர்த்தெறிந்து
சாதித்துக் கொண்டிருக்கும்
நம் இனம் என்பதில்
எனக்குமோர் மிடுக்கு!!…
‘அனைத்து பெண்களுக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..’
-சிந்து
CATEGORIES இலக்கியம்