இல்லாதவர்களிடமிருந்து இருப்பவர்களுக்கு சலுகை; இது எந்த வகையில் நியாயம்; சுமந்திரன் கேள்வி

இல்லாதவர்களிடமிருந்து இருப்பவர்களுக்கு சலுகை; இது எந்த வகையில் நியாயம்; சுமந்திரன் கேள்வி

அரசின் மின் கட்டண அதிகரிப்பின் மூலம் இல்லாதவர்களிடமிருந்து இருப்பவர்களுக்கு பெற்று கொடுக்கும் செயற்பாடு நடை முறைப்படுவதாக குற்றம்சாட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எம்.ஏ. சுமந்திரன், .அதிக மின்னலகை பயன்படுத்துபவர்கள் குறைந்த அளவான கட்டணத்தை செலுத்துவைத்து எந்த வகையில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணையை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த சுமந்திரன் எம்.பி. மேலும் பேசுகையில்,

2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியல் அழுத்தத்தின் காரணமாக பதவி விலகினார்கள்.அப்போது பாராளுமன்றத்தின் ஊடாக எவரும் பதவி நீக்கப்படவில்லை.ஆனால் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவரை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை யோசனை முன்வைக்கும் போது அதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலனை செய்து சிறந்த தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்.மின்சார சபைக்கும்,பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இணக்கமான தன்மை காணப்பட வேண்டும்

பூஜ்ஜியம் முதல் 30 வரை மின்னலகுகளை பயன்படுத்துவோருக்கு 175 வீதத்தினால் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.மின்கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளார்கள். அதிக மின்னலகை பயன்படுத்துபவர்கள் குறைந்த அளவான கட்டணத்தை செலுத்துகின்றனர். அதாவது இல்லாதவர்களிடமிருந்து இருப்பவர்களுக்கு பெற்று கொடுக்கும் செயற்பாடு இங்கு நடைமுறைப்படுத்துகிறது அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்களே அதிக கட்டணத்தை செலுத்த வேண்டும் மிகவும் துன்பத்தில் கஷ்டத்தில் வாழ்பவர்கள் இதனை அனுபவிக்க கூடாது .

அரசில் உள்ளவர்கள் மக்களின் நிலைப்பாடு, துன்பத்தை அதிகம் அறிந்து கொள்ள வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் செவ்வாய்க்கிழமை அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.பலாலி பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளார்கள்.பொலிஸாரின் செயற்பாட்டினால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனின் பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது .இது தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )