53 ஆண்டுகள் சிங்கள தலைவர்கள் நாட்டை அழித்தனர்; பிரபாகரன் சில ஆண்டுகள் நாட்டை அழித்தார்

53 ஆண்டுகள் சிங்கள தலைவர்கள் நாட்டை அழித்தனர்; பிரபாகரன் சில ஆண்டுகள் நாட்டை அழித்தார்

பௌத்த பிக்குகள் மீதும் பிழை உள்ளதாகவும் கடந்த காலத்தில் ராஜபக்சாக்களின் செயற்பாடுகளை கண்டித்திருந்தால் இன்று இந்த நாடு இந்த நிலைக்கு சென்றிருக்காது என முப்பீட ஐக்கிய பிக்குகள் முன்னணியின் அனுநாயக்க மதுரட தம்மாலங்கார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய பிக்குகள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

விசேடமாக நாட்டின் மீது பற்றுடைய பிக்குகள் என்ற முறையில் சாதி பேத இன பேதமற்ற பிக்குகள் என்ற முறையில் எங்களிற்கு மதம், இனம், நாடு என்பவற்றறை விற்று பெறுவதற்கு ஒன்றுமில்லை.

கடந்த காலத்தில் மதத்தை விற்று நாட்டை விட்டு ஒரு சரியான ஆட்சியை நடத்த முடியாத அரசாங்கத்தை நாம் பார்த்தோம்.

மீண்டும் அவர்கள் முன்பைப் போன்றே வேறு வழியில் நாட்டை வீணடிக்கும் செயற்பாடுகளை தற்போதும் முன்னெடுக்கின்றனர்.

அதேபோன்று தற்போது பௌத்த மதத்தையும் வீணடிக்கின்றனர். அதாவது அந்த புத்தரின் பாதம்பட்ட நாடு இது. அவ்வாறான நாட்டை வீணடிக்கின்றனர்

அதாவது நாங்கள் பௌத்த மக்கள், அன்று ஏமாந்து விட்டார்கள். இன்றும் பழைய வழியிலே நாட்டை வழி நடத்துகின்றனர்.

சஜித் பிரமதாச இந்த அமைப்பை மாற்றுவாராயின் அடுத்த தலைமுறைகள் சிறந்த முறையில் செயற்படும்

எங்கள் மீதும் பிழை உள்ளது அன்று மஹிந்தவின் ஆட்களின் செயற்பாடுகளை கண்டித்து இருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

நாடு விழிப்புணர்வுடன் செயற்பட நாட்டில் உணவு தட்டுப்பாடு கடன் கூட்டிற்குள் உள்ள நாடு இது..

அதை விடுவிக்க சஜித் பிரமதாச அவர்களால் மட்டுமே முடியும். 53 ஆண்டுகள் நாட்டை வீணடித்தனர்.

சில ஆண்டுகள் பிரபாகரன் வீணடித்தார்.

மற்றும் எங்கள் தலைவரை குறை சொல்ல முடியாது ஏனென்றால் அவர்தான் நாட்டை வல்லரசாக உள்ளார்.

மற்றும் ஜெரன் பெனோண்டோவிற்கு சரியான முறையில் தண்டனை வழங்குங்கள்.- என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )