
தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம்
தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியா மில்வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றது.
தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்,செயலாளர் ப.சத்தியலிங்கம்,
சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ. சுமந்திரன்,சி.சிறிதரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சி.சிவமோகன், பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன், பீட்டர்இளஞ்செழியன், மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் யாப்பு திருத்தம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோதிலும் போதுமான நேரம் இல்லாமையால் முழுமையாக யாப்பு திருத்தம் இடம்பெறவில்லை
CATEGORIES செய்திகள்

