
ரணில் ஆட்சியில் ‘குண்டர் அரசியல்’
தற்போதைய அரசாங்கத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி தமக்கு இஷ்டம் போல் செயற்படலாம் என பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் நினைத்தால் அது தவறு எனவும் குண்டர் அரசியலை செயல்படுத்தும் அனைவருக்கும் அந்தஸ்து பாராமல் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவினால் தாக்குதலுக்கு உள்ளான சமூக ஆர்வலரும் பொறியியலாளருமான பியத் நிகேஷலவின் உடல்நிலை குறித்து ஆராய கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்ற போது ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
ஆணை இல்லாத, கொடூரம் நிறைந்த இந்த அரசில் இதுபோன்ற கொடூர தாக்குதல்கள் நடப்பது வருத்தமளிக்கிறது. பாராளுமன்றம் உலகுக்கு அறிவித்த குண்டர் பிரசாரத்தில் பலியானவர்களில் ஒருவராக இதனை அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது, மேலும் பல இளைஞர்கள் தாக்கப்பட உள்ளனர் என்ற பட்டியல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது எனவே, இனி வரும் காலங்களில் இது போன்ற அமைதிப் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது மேலும் வன்முறை நடந்தால், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி அரசில் மிகவும் கொடூரமான,குண்டர் அரசியலை செயல்படுத்தும் அனைவருக்கும் அந்தஸ்து பாராமல் கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி தமக்கு இஷ்டம் போல் செயற்படலாம் என பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் நினைத்தால் அது தவறு எனவும் அரசியல் பழிவாங்கல்களை அவர் அங்கீகரிக்கவில்லை மாறாக இவ்வாறான சட்ட விரோத செயல்களை நாட்டின் சட்டத்திற்கு அமைவாக அந்தஸ்து பாராமல் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் எனவும், இவ்வாறான கோழைத்தனமான செயல்களை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது எனவும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

