திருலையில் பௌத்த நிகழ்வை தடுத்தால்  பாரிய அழிவுகளை தமிழ் தரப்பு எதிர்கொள்ள நேரிடும்

திருலையில் பௌத்த நிகழ்வை தடுத்தால் பாரிய அழிவுகளை தமிழ் தரப்பு எதிர்கொள்ள நேரிடும்

பௌத்த மதத்தின் பெருமைக்குரிய சியாம் நிகாயவின் 270 ஆவது வருட நிறைவு திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த மத அனுஸ்டானத்துக்கு தமிழ் கூட்டமைப்பினர் தடையேற்படுத்தினால் பாரிய அழிவுகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொதுஜன பெரமுன எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான 2 ஆம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் பேசுகையில்,

தொல்பொருள் திணைக்களத்தின் சின்னத்தை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையாக தூபி காணப்படுகிறது,ஏனெனில் இலங்கை ஒரு பௌத்த நாடு ஆகவே எக்காரணங்களுக்காகவும் தொல்பொருள் திணைக்கள சின்னத்தை மாற்றியமைக்க முடியாது.

புராதன தொல்பொருட்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகல இனங்களுக்கும் உண்டு.இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் புராதன தொல்பொருள் சின்னங்களை பாதூக்க வேண்டும். பௌத்த சின்னங்களை அழித்து அதன் மீது சிவலிங்கம்,திரிசூலம் ஆகியவற்றை அமைத்து கோயில் கட்டுவது முறையற்றது.இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

சுமந்திரன் உட்பட பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த சின்னங்களை அழிக்க ஒத்துழைப்பு வழங்கி விட்டு,வெறுப்பு பேச்சுக்களை வடக்கில் குறிப்பிட்டு விட்டு கொழும்பில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள்.இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற காரணத்தினால் இவ்வாறானவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.பிற நாடுகளில் இவ்வாறு செயற்பட்டால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

பௌத்த மதத்தின் மேன்மை பொருந்திய சியாம் நிகாயவின் 270 ஆவது வருட நிறைவு திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி சிறப்பான மத அனுஷ்டானமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.இது முறையற்றது.வரலாற்று சிறப்புமிக்க இந்த மத அனுஸ்டானத்துக்கு தமிழ் கூட்டமைப்பினர் தடையேற்படுத்தினால் பாரிய அழிவுகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை கூட்டமைப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )