மக்கள் வெளியே,புத்தர் உள்ளே தையிட்டியில் ஆர்ப்பாட்டம்; விகாரையை அகற்ற வலியுறுத்தல்

மக்கள் வெளியே,புத்தர் உள்ளே தையிட்டியில் ஆர்ப்பாட்டம்; விகாரையை அகற்ற வலியுறுத்தல்

யாழ்ப்பாணம் வலிவடக்கு தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறும் குறித்த பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலி.வடக்கு தையிட்டிப் பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமலுள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் படையினரால்

ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணி ,பொது மக்களின் ஏற்பாட்டில் பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பேரணி, தையிட்டி விகாரை வரை சென்று விகாரைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செ கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களால் எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு ,மக்கள் வெளியே புத்தர் உள்ளே , எங்களை நிம்மதியாக வாழ்விடு போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

ர்ப்பாட்டக்காரர்கள் விகாரையின் நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அப்பகுதியில் பெருமாவு பொலிஸார் குவிக்கப்பட்டு விகாரைக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி தொடர்
ஆர்ப்பாத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )