
இலங்கையில் மத சுதந்திரம் இல்லை; சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு
இலங்கையில் கடந்த ஆண்டு மத சுதந்திரம் மோசமடைந்துள்ளதன் காரணமாக அது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கவனம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக் குழு தனது 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஊடாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திடம் பரிந்துரைத்துள்ளது.
இலங்கையில் மத சுதந்திரம் சீர்குலைந்து வருவதை கவனத்தில் கொள்ள இலங்கையை சிறப்பு கண்காணிப்பு பட்டியலில் சேர்க்குமாறு சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு முதல் தடவையாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
உலகில் உள்ள நாடுகளின் அரசாங்கங்கள் மத சுதந்திரத்தை மீறினால் அல்லது மீறல் சம்பவங்களை புறக்கணித்தால், அந்த நாடுகளில் கவனம் செலுத்துமாறு சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக் குழு அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு பரிந்துரைக்கிறது.
இலங்கையில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சில மதத் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் அரசாங்கங்கள் மத சுதந்திரத்தை மீறினால் அல்லது அந்த மீறலை கவனத்தில் கொள்ளாமல் இருக்கும் நாடுகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும் என ஆணைக்குழு கூறியுள்ளது.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு விசேட கண்காணிப்பு பட்டியலில் 9 நாடுகளை உள்ளடக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
2022 ஆம் ஆண்டு பட்டியலில் உள்ளடக்கப்பட்ட அல்ஜீரியா,மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகிய நாடுகள் இம்முறையும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை, மலேசியா, துருக்கி, உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான், ஈராக், இந்தோனேசியா, எகிப்து, அசர்பைஜான், அல்ஜீரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகிய நாடுகள் இம்முறை விசேட கண்காணிப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 11 நாடுகளாகும்.

