
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பொதுமக்களின் கருத்து; மே 31வரை அவகாசம்
இந்த மே மாதம் 31ஆம் திகதி வரை உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் மே 31, 2023 வரையிலான காலப்பகுதியில் பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் தங்கள் முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை சமர்ப்பிக்க முடியும் என்று நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை கருத்திற் கொண்டு புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

