
ஆறு வருடங்களுக்குள் அனைவருக்கும் காணி; அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ
அடுத்த ஆறு வருடங்களுக்குள் இந்நாட்டவர் அனைவருக்கும் தங்களுக்கு உரித்தான காணி இருக்கும் என்பதை நான் உறுதியளிக்கிறேன். அதற்காக நமது நாட்டின் தொழிலாளர்களை தொழில்முயற்சியாளர்கள் ஆக்க வேண்டியது அவசியம் என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
எவர் ஒருவருக்கும் சரியான இலக்கு ஒன்று இல்லாதபோது அவர்களது பயணத்தைதொடர்வது கடினமாகும். ஜனாதிபதியின் உரை ஒரு இலக்கையும் நோக்கையும் கொண்டதாக காணப்படுகிறது. அதுதான் அரசியலில் நிகழ வேண்டிய மாற்றமாகும். 6 தடவைகள்பிரதமராக இருந்த ரணில் இன்று ஜனாதிபதியாகி தனக்கான மைதானத்தை கட்டமைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்.
அன்று சவால்களை ஏற்க முன்வராதவர்கள் இன்று பேரணியாகச் செல்வதில் அர்த்தமில்லைஐக்கிய மக்கள் சக்தி அதனை புரிந்துகொள்ள நீண்ட காலம் தேவைப்படும் நாம் அதனை புரிந்துகொண்டதாலேயே இவ்விடத்தில் இருக்கிறோம். அடுத்த வருடத்தில்சுற்றுலாத்துறையை அதிக வருமானம் ஈட்டும் துறைகளில் முதலிடத்திற்கு கொண்டு வரவேண்டும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அந்த சவாலை நான் ஏற்றுக்கொள்வேன்.
இன்று வரையில் காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் 2.5 பில்லியன் வெளிநாட்டுதொழில்வாய்ப்புக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின்கடன் வசதிகள் மட்டுமே நமக்குப் போதுமானதல்ல.
எதிர்கால சந்ததிக்காக நல்லதொரு நாட்டினை உருவாக்க வேண்டும் என்பதே அவரதுநோக்கமாகும். அதற்காக அவர் 2048 யும் வெற்றிகொள்வார். இவற்றை நமக்காகவே செய்கிறார். இதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக காணப்பட்ட நிலைமையை தலைகீழாகமாற்றியவரும் அவரேயாவார். எதிர்க் கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டங்களை செய்வது மாத்திரமேநோக்கமாக இருந்தாலும் 2048 அடுத்த சந்ததிக்கான அபிவிருத்தி அடைந்த நாட்டினைஉருவாக்குவதே எமது நோக்கம்.
ஐக்கிய தேசிய கட்சியை ஒருவராலும் வீழ்த்த முடியாது. அதனால் அடுத்த ஆறுவருடங்களுக்குள் இந்நாட்டவர் அனைவருக்கும் தங்களுக்கு உரித்தான காணி இருக்கும் என்பதை நான் உறுதியளிக்கிறேன். அதற்காக நமது நாட்டின் தொழிலாளர்களை தொழில்முயற்சியாளர்கள் ஆக்க வேண்டியது அவசியமாகும். நாம் இறந்துவிட்டாலும் நமது பிள்ளைகள் வாழ்வர் என்பதால் 2048 ஆம் ஆண்டு இலக்கை வெற்றிகொள்ள முடியும் என்றார்.

