மே 9 போராட்டக் காலத்தில் பொன்சேகாவும் அமெரிக்க தூதுவருமே சவேந்திர சில்வாவை வழிநடத்தினர்

மே 9 போராட்டக் காலத்தில் பொன்சேகாவும் அமெரிக்க தூதுவருமே சவேந்திர சில்வாவை வழிநடத்தினர்

மே 9 போராட்டக் காலத்தில் பீல்ட் மார்ஷசல் சரத் பொன்சேகாவும், அமெரிக்க தூதுவருமே இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வாவை வழிநடத்தியுள்ளனர் என்று எதிர்க்கட்சியில் சுயாதீன அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஏப்ரல் 9, மே 9, ஜுலை 9இல் நடந்த அமெரிக்காவின் விளையாட்டுகளின் உண்மைகள் தொடர்பில் நான் புத்தகமொன்றை வெளியிட்டேன். 9இல் மறைந்துள்ள கதைகள் என்ற பெயரில் அதனை வெளியிட்டிருந்தேன். அதில் ஒரு நடிகரே (சரத்பொன்சேகா) இதற்கு முன்னர் என்னைப்பற்றி கூறியிருந்தார். போராட்ட இடத்திற்கு சென்று அவருக்கு மட்டுமே கதைக்க முடியுமாக இருந்தது. அவரே இராணுவத் தளபதியான சவேந்திரசில்வாவை வழிநடத்தினார். நான் புத்தகத்தில் பெயர் குறிப்பிடவில்லை.

இதேவேளை சவேந்திரசில்வாவை அமெரிக்கா தூதுவரும் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவுமே வழிநடத்தினர். அந்த புத்தகத்தை வெளியிடும் போது அவர்களுக்கு வலிக்கும். தூதுவர் ஜுலியாவும் அதுபற்றி டுவிட்டரில் அது பெய்யான கருத்து என்று கூறியுள்ளார். ஒரு நாளில் அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதனை கூறியுள்ளார். நாட்டை லிபியாவாக மாற்றும் செயற்பாட்டையே நான் வெளிப்படுத்தியுள்ளேன்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )