தொடரும் சீரழிவுக் கலாசாரம்

தொடரும் சீரழிவுக் கலாசாரம்

ஆயுதப் போராட்டம் நடைபெற்ற மூன்று தசாப்தங்களிலும் எம்மக்கள் எதிரியின் குண்டுவீச்சுகள், இடப் பெயர்வுகள், பொருளாதாரத்தடை என்று பல்வேறு இன்னல்களைக் கடந்து வந்திருக்கிறார்கள். ஆனாலும் ஒரு ஒழுக்கமான சமுதாயமாக வாழ்வை நகர்த்திச் செல்ல அவர்கள் தவறவில்லை. குற்றங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததுடன், குற்றம் அல்லது சமுதாய ஒழுங்கு சீர்குலைக்கப்படும் நிலை எங்கு எழுந்தாலும் அதனைத் தட்டிக் கேட்டு சீர்செய்யும் சமுக விழிப்புணர்வு எல்லோரிடத்திலும் இருந்தது. பெற்றோர் – பிள்ளைகள் – ஆசிரியர் இடையேயான உறவு வலுவானதாக இருந்தது. இதனால் பிள்ளைகள் வழி தவறைச் செல்லும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது.

ஆயுதங்கள் மௌனிக்கப் பட்டதன் பின்னும் எதிரியின் மறைமுக இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இது எதிர்பார்க்கப் பட்டதுதான். இந்திய இராணுவம் எமது மண்ணில் கால் பதித்த போதுகூட நீலப்படங்கள், போதைவஸ்து, பாக்கு, பாடசாலை மாணவியரை விபசாரத்தில் ஈடுபடுத்துவது…. என்று எமது இளைய சமுதாயத்தை அழிக்க பகீரதப் பிரயத்தனம் செய்தது. இயக்கம் போதித்த அறம் மட்டுமல்லாமல் பெற்றோர், ஆசிரியர், உறவினர், ஊர்த் தலைவர்கள் என்று அத்தனைபேரின் கண்காணிப்பும் கட்டுப்பாடும் இந்த முயற்சியை முறியடித்திருந்தது.

இன்று, நிலைமை தலைகீழாக உள்ளது. எமதினத்தின் ஆணிவேரையே அரித்தெடுக்கும் ஒரு பாரிய பிரச்சனையாக கலாசாரச் சீரழிவு மாறியுள்ளது. ஊரின் நடுவே நடைபெறும் விபசார விடுதிகள், பள்ளி மாணவிகள் விபசாரத்தில் ஈடுபடுவது, பள்ளி மாணவிகளின் – மணமாகாத இளம் பெண்களின் கருத்தரிக்கும் வீதத்தின் அபாயகரமான அதிகரிப்பு, தறிகெட்ட வாழ்க்கை முறை, சிறுவர் துஷ்பிரயோகம், வெட்டியாக ஊர்சுற்றும் இளைஞர் யுவதிகளின் கையில் தாராள பணப்புழக்கம், இளைய சமுதாயத்தினரின் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கைபேசி பாவனை, வாள் வெட்டு கலாசாரம், மது- போதைவஸ்து-பாக்கு பாவனை அதிகரிப்பும் அவை இலகுவாகக் கிடைப்பதும்….. என்று சீரழிவுப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இத்தனை ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள் தங்கள் உயிர்களைக் கொடுத்துக் கட்டிக் காத்த மண்ணின் அடிப்படை விழுமியங்களைக் கூட காப்பாற்ற முடியாமல் எம் மக்கள் இருப்பதேன்? தென்னிலங்கை மக்களின் வருகை, வெளிநாட்டுப் பணம், வெளிநாட்டு மோகமும் அதனால் விளைந்த நாகரிகத் தாக்கமும் என்று காரணங்களைத் தேடியெடுத்துச் சொன்னாலும், எங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய சுதந்திரம் கொடுத்து, அவர்களைக் கண்காணிக்கத் தவறி, கட்டற்ற வாழ்வுக்கு அனுசரணையாகவிருக்கும் பெற்றோர் இந்தப் பாரிய தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும். கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை வயது வேறுபாடில்லாமல், பெண்களுக்கெதிரான பாலியல் துஷ்பிரயோகங்களாக உருவெடுத்துள்ளது.

அண்மையில் வடமராட்சி யுவதி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்டது அதிர்ச்சிகரமான ஒரு கலாசார சீரழிவு. ஆண் பெண் இருபாலாரும் அளவுக்கதிகமான சுதந்திரத்துடன், கண்காணிப்பு எதுவுமின்றி இருந்தது சமுதாய கட்டமைப்பைக் கேள்விக் குறியாக்கி, எவருக்கும் பாதுகாப்பில்லை என்பதை வெளிக் கொணர்ந்திருக்கிறது. இதற்குக் காரணமான இரு பகுதியினரின் பெற்றவர்களும் என்ன செய்து கொண்டிருந்தனர்? இப்போது தொலைக்காட்சி, ‘யு ரியுப்’, ‘ஃபேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’ போன்ற சமுக வலைத்தளங்கள் போன்றவற்றை பார்க்காதவர்களே இல்லை. பெண்களுக்கெதிரான இத்தகைய எத்தனை இழி செயல்களை அதில் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? இதைப் பார்த்த பின்பும் ஏன் உங்களால் எச்சரிக்கையாக இருக்க முடியவில்லை? உங்கள் குழந்தைகளை கண்காணித்து கண்டிப்புடன் வைத்திருக்க முடியவில்லை? சிறுவர்களின் கையில் விலையுயர்ந்த கைபேசிகளைக் கொடுக்கத் தெரிந்த நீங்கள் அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள், எங்கு போகிறார்கள், அவர்களின் நண்பர்கள் யார், அவர்களின் நடத்தையில் மாற்றம் தெரிகிறதா என்பனவற்றை அவதானிக்காமல் பெற்றோர்க்குரிய கடமையில் இருந்து தவறுவதேன்?

மேலதிக வகுப்புகள் என்று பிள்ளைகள் செல்லும்போது கண்காணிக்கப் படுதல்.
மட்டற்ற சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தல்.
பிள்ளைகளின் நண்பர்களையும் அவர்களின் பெற்றோரையும் பெற்றவர்கள் தெரிந்து வைத்திருத்தல்.
ஆசிரிய – மாணவ நல்லுறவு பேணப்படல். பாடசாலைகளிலும் இளைய சமுதாயம் கூடும் இடங்களிலும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு போதிக்கப்படுதல்.
வேலையற்ற இளைஞர் யுவதிகளின் அடாவடித்தனங்கள் கட்டுப்படுத்தப் பட்டு அவர்கள் பிரயோசனமான செயற் திட்டங்களினுள் உள்வாங்கப்படல்.
ஆங்காங்கு முளைத்திருக்கும் ‘லொட்ஜ்’கள் கடுமையான சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடத்தப்படல்.
பொது இடங்களை அண்மித்து மதுக்கடைகள் திறக்கப்படுவதை தடுத்தல்.
எல்லாவற்றிலும் மேலாக, பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுத்தல். – இதன்மூலம் பெண்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நடைமுறையிலிருந்து சமுதாயம் விடுவிக்கப்படும்.
சமுதாய சீர்கேடுகளை மூடி மறைக்காமல், அவற்றை வெளிக்கொணர்ந்து, விவாதித்து, அதற்கு ஒரு முடிவு காணல்.
நான், எனது குடும்பம் என்று இல்லாமல் சமுதாய புரிந்துணர்வுடன் ஒன்றிணைந்து செயற்படுதல்.

என்று பாரிய பணி எம்முன்னே விரிந்து கிடக்கிறது. காலம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எங்கள் பிள்ளைகளுக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்து செயலாற்றுவோம்.

(கொற்றவை)
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )