பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தில் பொலிஸாருக்கு அதிகாரம் எதிர்க்கிறார் அலி சப்ரி

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தில் பொலிஸாருக்கு அதிகாரம் எதிர்க்கிறார் அலி சப்ரி

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில அம்சங்களுடன் தான் உடன்படவில்லை எனவும் வரைவுச் சட்ட மூலத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென்பது அரசாங்கத்திலுள்ள அனைவரினதும் பொதுவான கருத்தாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில விடயங்களில் எனக்கு உடன்பாடில்லை. அதை அமைச்சரவையிலும் கூறியுள்ளோம். பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்க அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

குறித்த அதிகாரமானது, அமைச்சரோ அல்லது குறைந்தபட்சம் அது பாதுகாப்புச் செயலாளரிடமோ இருக்க வேண்டும். இதற்கு பரந்த வரைவிலக்கணம் கொடுப்பது மிகவும் ஆபத்தானது. இது தவறாகப் பயன்படுத்தப்படலாம். இது பயங்கரவாத சூழ்நிலையில் மாத்திரம் பயன்படுத்தக்கூடிய சட்டமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையின் தென் மாகாணத்தில் இருந்து சீனாவுக்கு மிக முக்கியமான இடத்தை வழங்குவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடமிருந்து எவ்விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் நான் கட்சியை விட்டு வெளியேறி பணியாற்றும் நபர் அல்ல. வேறு யாரையும் தலைவராக பார்க்கவும் இல்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நான் பணியாற்றியதில்லை. ஆனால் அவருக்கு எதிராக முன்னர் செயற்பட்டுள்ளேன். தற்போது அவருடன் முதன்முறையாக பணியாற்றுகிறேன். அவரைப் பற்றி எங்களுக்கு தவறான புரிதல் இருந்ததை என்னால் பார்க்க முடிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )