25 ல் உள்ளூராட்சித் தேர்தல் நடக்காது; மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது

25 ல் உள்ளூராட்சித் தேர்தல் நடக்காது; மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் திகதி குறிப்பிடப்படாது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு தேவையான நிதி கிடைக்காத காரணத்தினால் ஏப்ரல் 25 ஆம் திகதி திட்டமிட்டவாறு தேர்தலை நடத்த முடியாது என்றும், இதனால் இரண்டாவது தடவையாகவும் தேதர்தலைல ஒத்தி வைக்க வேண்டியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

முதலில் மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், அதற்கான நிதி கிடைக்காத காரணத்தினால் அந்தத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும் நிதி அமைச்சினால் நிதியை வழங்குவது தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படாத காரணத்தினால் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு கூறுகையில்,

உள்ளூராட்சி தேர்தலை உரியவாறு நடத்துவதற்கு பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் ஆணைக்குழு பணிகளை மேற்கொண்டது. எனினும் அதற்கு தேவையான நிதி கிடைக்காமை மற்றும் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்தினாலான விடயங்கள் காரணமாக ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த எதிர்பார்க்கப்பட்டட தேர்தலை மீண்டும் இரண்டாவது முறையாக ஒத்தி வைவக்க வேண்டியுள்ளது.

அதனால் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி கிடைக்கப்பெறும் திகதி அல்லது உயர்நீதிமன்றத்தின் முன்னால் காணப்படும் வழக்குகள் தொடர்பான தீர்ப்பின் அடிப்படையில் தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும்.

எவ்வாறாயினும் தேர்தலை துரிதமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ச்சியாக முன்னெடுக்கும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )