ஜனாதிபதி ரணிலுக்கு காலையில் எதிர்ப்பு; மாலையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணிலுக்கு காலையில் எதிர்ப்பு; மாலையில் சந்திப்பு

காலையில் ஜனாதிபதிக்கு எதிராக கதைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரவில் ஜனாதிபதியுடன் கதைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாக்க உதவுமாறு கோருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு கட்சித் தாவல்கள் இடம்பெறவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ரங்கே பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

காலையில் ஜனாதிபதிக்கு எதிராக கதைக்கிறார். இரவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாத்து தருமாறு ஜனாதிபதியிடம் அழுது மன்றாடுகின்றார். இரண்டு வருடங்களுக்காவது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாத்து அதன்பின்னர் யாலவுக்கு சென்று யானைகளை பார்த்து ஓய்வு எடுப்பதே சஜித் பிரேமதாசவின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடனேயே இருக்கின்றனர். இன்னும் சில நாட்களில் நல்ல விளையாட்டுகளை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )