யாழில் ஜனாதியுடன் நடந்த பேச்சில் நம்பிக்கை இல்லை

யாழில் ஜனாதியுடன் நடந்த பேச்சில் நம்பிக்கை இல்லை

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு பதில் வழங்கினார்.

யாழில் நடந்த சந்திப்பில் படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் எந்த காலப்பகுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என சொல்லவில்லை. 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படலாம் என சொல்லுகின்றார்கள். இதைத் தான் தொடர்ச்சியாக சொல்லுகின்றார்கள் ஆனால் இன்னும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் யாழில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பாக எங்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை எனவும் சுமந்திரன் கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )