
மைத்திரியை உடனடியாக உள்ளே தள்ளுங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான முழுத் தவறையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கடும் சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இழப்பீடு வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நாட்டுக்கும் நீதி வழங்க முடியாது என்பதால் முன்னாள் ஜனாதிபதிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2019 உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பில் போதியளவு புலனாய்வுத் தகவல்கள் பெற்றிருந்தும் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

