
கிளிநொச்சியில் கட்டுப் பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் முகமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி நேற்று கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் செயலாளர் வீரபாகு விஜயகுமார் ஆகியோர் நேற்று மதியம் கட்டுப் பணத்தை செலுத்தினர்.
கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணத்தை முதலாவதாக தமிழரசு கட்சி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

