இந்தியாவில் ஜ.எஸ். அமைப்பினருடன் தொடர்பு ; காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் அதிரடியாகக் கைது

இந்தியாவில் ஜ.எஸ். அமைப்பினருடன் தொடர்பு ; காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் அதிரடியாகக் கைது

இந்தியாவில் கைது செய்யப்பட்ட,உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹ்ரான்  ஹசீமுடன் தொடர்புடையவர்களான ஐ .எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களுடன்  தொடர்பில்  இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரை  திங்கட்கிழமை  இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினர்  சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாத்தில் இந்தியா கோயம்புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோர்  டிசம்பர் 29 ஆம்  திகதி இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சந்தேகநபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதியில் குற்றவியல் சதித்திட்டத்தில் ஈடுபட்டதுடன் இலங்கையில் 2019 ஏப்பிரல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான்  ஹாசீமுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும்.கைது செய்யப்பட்ட ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவருடன் காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடைய உமர் லெப்பை அகமட்ட நுஸ்கீன் முகநூலில் தொடர்புகளை பேணிவந்துள்ளதாக  இந்திய உளவுத்துறை விசாரணையின் தெரியவந்ததையடுத்து  இலங்கை உளவுத்துறைக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் காத்தான்குடி பழைய கல்முனை வீதி எம்.பி.சி.எஸ். குறுக்கு வீதியைச் சேர்ந்த  குறித்த நபரை திங்கட்கிழமை இரவு அவரது வீட்டில் வைத்து விசாரணைக்காக  பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக  அவர்மேலும்  தெரிவித்தார். 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )