கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சி

கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சி

கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் நகரப்பகுதியில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இரவுவேளை வீடொன்றினுள் அத்துமீறி கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த மூவர் வீட்டில் இருந்த கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ளனர்.இதன்போது, அவர்கள் அபயக் குரல் எழுப்பவே வீட்டினுள் நுழைந்த மூவரும் அவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இருவரும் தலைமறைவாகி உள்ள நிலையில் இருவரையும் கைது செய்ய பொலிஸார் தேடி வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )