இனப்பிரச்சினைக்குத் தீர்வு; சொல்ஹெய்ம் மத்தியஸ்தரா ?

இனப்பிரச்சினைக்குத் தீர்வு; சொல்ஹெய்ம் மத்தியஸ்தரா ?

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்படும் சர்வகட்சி கலந்துரையாடலுக்கான மறைமுக மத்தியஸ்தராக எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது நோர்வே சார்பில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றியிருந்தவர் எரிக் சொல்ஹெய்ம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் காலநிலை தொடர்பான தூதுவராக அவர் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார் .

கடந்த 13ஆம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய சர்வகட்சி கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த16ஆம் திகதி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனையும் எரிக் சொல்ஹெய்ம் சந்தித்தித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் நேற்று முன்தினம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டதரணி நிசாம் காரியப்பர் ஆகியோரை திங்கட்கிழமை முற்பகல் சந்தித்து, முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

சர்வகட்சி கலந்துரையாடலுக்கான பின்னணி ஏற்பாடுகளைத் தொடர்வது பற்றியே இந்தப் பேச்சுக்களின்போது அதிகளவு அக்கறையை எரிக் சொல்ஹெய்ம் வெளிப்படுத்தியுள்ளார் எனக் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )