விஷ்வரூபமெடுக்கும்  சிறுநீரக வியாபாரம்; மாத்தளை பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறுநீரகத்தை விற்றுள்ள தாகத் தகவல்

விஷ்வரூபமெடுக்கும்  சிறுநீரக வியாபாரம்; மாத்தளை பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறுநீரகத்தை விற்றுள்ள தாகத் தகவல்

மாத்தளை, உக்குவளை பிரதேசத்தில் தோட்டங்களை அண்மித்து வாழும் பல்வேறு வயதுடைய இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களை தெரிவு செய்து தரகர்கள் மேற்கொள்ளும் சிறுநீரக வியாபாரம் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சிறுநீரகம் மூன்று முதல் ஐந்து இலட்சம் ரூபா வரை கொள்வனவு செய்யப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் உடல் உறுப்புகள் விற்பனையில் கடத்தப்படும் மிக மோசமான நிலை உருவானதுடன், சிறுநீரக விற்பனையால் அப்பகுதி மக்கள் அதிகளவில் நோய்வாய்ப்பட்டு கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் பொருளாதாரச் சிக்கலால் தோட்ட  மக்கள் தங்களது சிறுநீரகத்தை விற்று வாழ்நாள் முழுவதும் பல்வேறு வகையில் உதவி செய்வதாக உறுதியளித்தனர்.கடைசியில்   சிறுநீரகத்தை கழற்றிய பிறகு தரகர் பெருமளவு பணத்தை எடுத்து மீதமுள்ள தொகையை பாகங்களாகவோ அல்லது அதுவும் இல்லாமலோ கைவிட்டு விடுகின்றனர். தமக்கு, பின்னர் சிறுநீரகத்தை வழங்கவுள்ளவர்கள் தமக்கு ஏற்பட்ட நிலையை  நோக்குகின்றார்.தங்கள் விடயத்தில் கவனம் செலுத்தப்படுவதில்லை என சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்பட்ட உக்குவெல பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

உக்குவளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தோட்ட மக்களிடம் இருந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறுநீரகத்தை விற்றுள்ளனர், மேலும் சிலர் வேலை கிடைக்காமல் நிர்க்கதியாகியுள்ளதோடு, சிறுநீரகத்தை விற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களது குடும்பங்களில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது.

சிறுநீரகத்தை விற்பனை செய்தவர்களைத் தேடி உக்குவளை பிரதேசத்தில் தோட்டங்களை அண்மித்த பல கிராமங்களுக்குச் சென்றபோது, அங்குள்ள பலர் சிறுநீரகத்தை விற்றுவிட்டதாக அறிவிக்கத் தயக்கம் காட்டியதுடன், பாதிப்புகள் குறித்து பேசத் தயங்குவதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )