60-70 ஆயிரம் பேரைக் கொன்று குவித்தவர் பொன்சேகா

60-70 ஆயிரம் பேரைக் கொன்று குவித்தவர் பொன்சேகா

60 ஆயிரம்,70 ஆயிரம் பேரை கொன்று குவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று எமக்கு ஜனநாயகம்,மனித உரிமைகளை சொல்லி தருகிறார் என முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன எம்.பி.யுமான விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை 2023 ஆண்டுக்கான வரைவது செலவுத்திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு,வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு .சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யும் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆற்றிய உரை தொடர்பில் சபையில் தர்க்கம் ஏற்பட்டது.பீல்ட் மார்ஷல் ஆற்றிய உரைக்கு அரச தரப்பு எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.குறிப்பாக முன்னாள் வனஜீவராசிகள் அமைச்சரான விமலவீர திசாநாயக்க சரத் பொன்சேகாவுடன் கடுமையாக தர்க்கப்பட்டார்.

வனஜீவராசிகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் சரத் பொன்சேகாவின் கருத்துக்களில் சேறு பூசல்கள் மாத்திரமே உள்ளன என அரச தரப்பு எம்.பி. க்கள் குற்றம்சாட்டினர். சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஒழுங்குப்பிரச்சினை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் ,குழப்பம் ஏற்பட்டது.

இதன்போது, உறுப்பினர்களே இந்தப் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என சபாநாயகர் குறிப்பிட்டார்.அவ்வாறாயின் சேறு பூசலையும் நிறுத்தச் சொல்லுங்கள்.வனஜீவராசிகள் அமைச்சின் விவாதத்தின் போது சேறு பூசல்களை இடம்பெறுகின்றன .காலி முகத்திடலுக்கு மிருகங்கள் வந்தால் அடித்து எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.

பதிலுக்கு சரத் பொன்சேகாவும் ஆவேசமாக கூச்சலிட்டார். இதன்போது உங்களின் ஆசனத்தில் அமருங்கள்,நீங்கள் உரையாற்றி விட்டீர்கள் என சபாநாயகர் சரத் பொன்சேகாவை பார்த்து கூறினார்.

இதன்போது எழுந்த முன்னாள் வனஜீவராசிகள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, எனது பெயரை சரத் பொன்சேகா குறிப்பிட்டால் நான் பதிலளிக்க வேண்டும்,நான் கடந்த 9 மாதங்களாக பாராளுமன்றத்தில் உரையாற்றவில்லை என்றார்.

இதன்போது குறிக்கிட்ட சபாநாயகர் உங்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றார்.

இதன்போது விமலவீர திஸாநாயக்க யானை தடுப்பு கால்வாய் அமைத்தது முட்டாள் தனமானது என்று அவர் குறிப்பிட்டார்.இவர் அமைச்சராக பதவி வகிக்கும் போது என்ன செய்தார்.ஒன்றும் செய்யவில்லை.அரசாங்கத்தின் செலவு இல்லாமல் யானை கால்வாய் அமைத்தேன்,அதனால் இன்று அந்த பிரதேச மக்கள் பாதுகாப்பாக உள்ளார்கள்.

60 ஆயிரம் 70 ஆயிரம் பேரை கொன்று குவித்தவர் இன்று எமக்கு ஜனநாயகம் பற்றி குறிப்பிட வருகிறார்.யானை -மனித மோதல் பற்றி கவலைப்படுகின்றார். சண்டியர்களை பாதுகாத்த பீல்ட் மார்ஷல் எமக்கு ஆலோசனை வழங்க வருகின்றார்.என்றார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )