பெரும்பான்மையுடன் கோரினால்; பாராளுமன்றத்தை ரணில் கலைப்பார்

பெரும்பான்மையுடன் கோரினால்; பாராளுமன்றத்தை ரணில் கலைப்பார்

முதுகெலும்பு இருக்குமாக இருந்தால் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்திக் காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு சாவல் விடுத்துள்ள நிலையில், பெரும்பான்மையுடன் கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதி அதற்கான நடவடிக்கை எடுக்கலாம் என்று சபை முதல்வர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு சவால் விடுத்தார்.

அதன்போது அவர் தெரிவிக்கையில்,

பிரதமர் உரையாற்றும் போது, பாராளுமன்றத்தை எப்போது கலைக்க முடியும் என்று கூறுகின்றார். அரசியலமைப்பில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை என்று கூறுகின்றார். ஆனால் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தின் தீர்மானம் ஊடாக பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்க முடியும். அத்துடன் இரண்டரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். இதனால் நாட்டு மக்களை தவறாக திசை திருப்ப வேண்டாம் என்று நாங்கள் கேட்கின்றோம்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும் உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். அரசாங்கத்திற்கு கிடைக்கும் பெறுபேறுகள் தொடர்பான அச்சம் இதற்கு தடையாக இருக்கலாம். ஆனால் அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தாலோ, நாட்டு மக்களின் நிலைப்பாடுகளுக்கு செவி சாய்ப்பதாக இருந்தால் தயவு செய்து தேர்தலுக்கு செல்லுமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்கின்றோம். இதற்கு தடைகளை போடாது இடமளிக்குமாறு கேட்கின்றோம் என்றார்.

இதேவேளை சபை முதல்வர் இது தொடர்பில் பதிலளிக்கும் போது கூறுகையில்,

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டரை வருடத்தின் பின்னரே ஜனாதிபதிக்கு கலைக்கும் அதிகாரம் கிடைக்கும். அதற்கு முன்னர் பெரும்பான்மையுடன் கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதி அதற்கான நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )