
அன்புள்ள அப்பா….!!
அன்புள்ள அப்பா….!!
உன்
நீண்ட பயணத்தின் பின்…
மழலைப் பருவத்தில்
உனக்காக நான் சேர்த்த
முத்தங்கள் எல்லாம்
உனைத் தொட்டிட
துடிக்கின்றன…
மனச்சிறையுடைத்து
துள்ளிப்பாய்ந்த ஆசை
முத்தங்கள்
கணனித் திரையுடன்
முட்டிமோதி…
மீண்டும்..
வலிபட்டு
துடிக்கிறது
உன் வருகைக்காய்…..
மிதயா கானவி
CATEGORIES இலக்கியம்

