விடுதலைக்கு காரணமான அனைவருக்கும் நன்றி; யாழிலிருந்து சாந்தனின் தாயார்

விடுதலைக்கு காரணமான அனைவருக்கும் நன்றி; யாழிலிருந்து சாந்தனின் தாயார்

30 வருடங்கள் கோவில் குளம் என திரிந்து முன்வைத்த வேண்டுதல்களுக்கு இன்று பலன் கிடைத்துள்ளது என்றும் தனது மகன் விடுதலையாவதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி என்றும் சாந்தனின் தாயார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரிசின் பரிந்துரையின் பேரில் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயனபடுத்தி நளினி உள்ளிட்ட அறுவரை வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது.

இந்த கொலைவழக்கில் குற்றவாளியாக 30 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்த சாந்தனின் தாயார், தனது மகன் விடுதலையானது தொடர்பில் யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“பேரறிவாளனை விடுதலை செய்ததில் இருந்து எனக்கு பெரும் மன வருத்தமாக இருந்தது. எனது பிள்ளையை எப்போது விடுதலை செய்வார்கள் என்று இப்போது தான் அது நிறைவேறியது.

எனது உடல்நிலை சரியில்லை இல்லையென்றால் நான் சென்று எனது பிள்ளையை அழைத்து வருவேன்.

எனது ஆசை எல்லாம் எனது பிள்ளை நல்லபடியாக என்னிடம் வந்து சேர வேண்டும். அவருடன் நான் சிறிது காலம் வாழ வேண்டும் அதற்காக தான் நான் உயிருடன் இருக்கிறேன் ”என கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )