சம்பந்தன் எம்.பி.க்கு 3 மாத விடுமுறை

சம்பந்தன் எம்.பி.க்கு 3 மாத விடுமுறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.க்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதித்தது.

பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.க்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்கமாறு

எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம். பி.கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் அவரது கோரிக்கைக்கு அரசு தரப்பினரும் இணங்கிய நிலையில் இரா. சம்பந்தன் எம்.பி.க்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதி வழங்குவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )