பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுகள் மேலும் அதிகரிப்பு

பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுகள் மேலும் அதிகரிப்பு

அரசியலமைப்பின் 22 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்ன்னர் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவுகள் மேலும்அதிகரித்துள்ளதாக தென்படுகிறது அக்கட்சியின் மூலோபாயவாதியான பசில் ராஜபக்சவின் கீழ் கட்சிக்குள் உள்ள ஒரு வலிமையான பிரிவுக்குள் பிரச்சினைகள் மேலெழுந்துள்ளன தற்போது அந்த குழுவின்எண்ணிக்கை 25க்கும் குறைவாக உள்ளதாகவும், அது மேலும் சிதைவடையும் என்பதும் அரசியல் வட்டாரங்களில் அதிகளவுக்கு பேசப்படும் விட யமாக காணப்படுகிறது .

இதேவேளை அக்குழுவில் உள்ள ஒரு சிலர் எதிர்க்கட்சி வரிசையில் சேரும் யோசனையையும்கொண்டுள்ளனர் பசில் ராஜபக்ச அரசாங்கத்திடம் கடந்த காலங்களில்விடுத்த வேண்டுகோள்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதன் அடிப்படையிலேயே இது அமைந்துள்ளது. அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சர்களாக10 பேரை நியமிக்கும் விவகாரமும் அதிருப் த்திக்கான காரணமெனகூறப்படுகிறது .ஆனால் தேர்தலை விரும்பாதமை வெவ்வேறு வழிகளில் செல்ல விரும்பினாலும், அவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் ஒரு காரணி யாக உள்ள தென வட்டாரங்கள் தெரிவித்தன

22ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பின் பின்விளைவுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் ஆழம் பற்றி ய ஒரு எ ண்ணப்பாட்டை வழங்குவதுடன் , பாராளுமன்றத்தில் பொதுஜனபெரமுன வுக்கு அறுதிபெரும்பான்மை பலம் உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்புகின்றது

22ஆவது திருத்தம்தொடர்பாக வாக்களிக்கும் தினமான அ க்டோபர் 21ஆம் திகதி அரசாங்க பாரா ளுமன்றக் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றத்தின் குழு அறை யில் நடைபெற்றபோது அ க்கூட்டத்தில், பசில் ராஜபக்சவின் ஆதரவாளரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அரசியலமைப்பில் உள்ள இரட்டைக் குடியுரிமைகள் தொடர்பிலான ஏற்பாடுகள் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் . பசில் ராஜபக்சவு க்காக காரியவசம்பேசுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள்பலர் கருதியதுடன் பிரேம்நாத் டோலவத்தே, காரியவசத்திற்கு கடுமையான பதிலடி கொடுத்ததுடன் வாக்காளர்கமத்தியில் ஏற்கனவே செல்ல முடியாதுள்ளதாகவும் இரட்டைபிரஜாவுரிமைகொண்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மட்டுமே தா ங்கள் இங்கு வந்துள்ளதாக மக்கள் நினைக்கிறார்கள்என்றும் ஏற்கனவே ஒரு முறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , என்ன நடந்தது என்பதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்,என்று அவர் கூறியுள்ளார்

அதே சமயம் ராஜபக்ச சகோதரர்களில் மூத்தவரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்சவும் காரியவசம் கள நிலவரத்தை அறியாதவர் எனவும் தேசியப்பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார் எனவும் கூறியதுடன்சாதாரண மக்களுடன் தொடர்பில் இருக்கும் அரசியல்வாதி என்ற வகையில், 22ஆவது திருத்தத்தை ஆதரிக்க வேண்டும் என்பதே த னது ஆலோசனைஎனவும் அவர் தெரிவித்திருந்தார் அத்துடன் அவர்,பசில் ராஜபக்ச தனது சகோதரரெனவும் . மூத்த சகோதரனான தன்னால் அவரைப் பார்த்துக் கொள்ள முடியும்மெனவும் குறிப்பிட்டிருந்தாக சண்டேடைம்ஸ் தெரிவித்துள்ளது

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )