ஒரு லட்சம் தமிழர்கள் வரை காமணாமல் போயுள்ளனர்; போரில் காணாமல் போன உறவினர்கள் பற்றிய பதிலுக்காக ஏங்கும் தமிழர்கள்

ஒரு லட்சம் தமிழர்கள் வரை காமணாமல் போயுள்ளனர்; போரில் காணாமல் போன உறவினர்கள் பற்றிய பதிலுக்காக ஏங்கும் தமிழர்கள்

பல ஆண்டுகளாக காணாமல் போன தனது இரண்டு பிள்ளைகளும் காமணாமல்போய் பல ஆண்டுகளாகியுள்ள நிலையில் அவர்களின் கதி என்ன என்று தெரியாமல் வேதனையடைந்திருக்கும் ஆறுமுக லட்சுமி, வட இலங்கை நகரமொன்றில் பெண்கள் குழுவொன்றுடன் ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தார். 2004 இல் லட்சுமியின் மகள் ரஞ்சினிதேவியும் அதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் சிவக்குமாரும் காணாமல் போயிருந்தனர்

“எனக்கு என் மகனின் முகத்தைப் பார்க்க வேண்டும்” என்று கண்ணீரைத் துடைத்தபடிகூறிய லட்சுமி, அவர்கள் காணாமல் போனபோது 16 மற்றும் 20 வயதெனவும் இருவரும் இறந்துவிட்டார்களா அல்லது உயிருடன் இருந்தார்களா என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் தமிழர்கள், உள்நாட்டுப் போரின் போது “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்”ஆகும்

விசாரணை முயற்சிகள் இருந்த போதிலும், இன்னும் சில உண்மைகள் அறியப்படாத நிலையில்உள்ளன

1980 களின் பிற்பகுதியில் இருந்து 60,000 முதல் 100,000 வரை காணாமல்போய் இருப்பதாக மனித உரிமைகள் குழுவான சர்வதேச மன்னிப்பு சபை மதிப்பிட்டுள்ளது , இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உலகின் மிகவும் அதிகளவில் உள்ளன

ஆனால் 2017 இல் அமைக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அரசாங்க அலுவலகம் (ஓ.எம்.பி ), 1981 முதல் காணாமல் போனோர் தொடர்பாக 14,965 அறிக்கைகளை பொதுமக்களிடமிருந்து பெற்றதாகக் கூறியுள்ளது

2009 இல் யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்தும், லட்சுமி போன்ற தமிழ் குடும்பங்கள் ,காணாமல் போன தங்கள் உறவினர்களையும் பதிலையும் தேடுகிறார்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் அரசுக்கு அதிகரித்து வருகிறது.

கடந்த அக்டோபர் 4 இல் ,ஐ .நாமனித உரிமைகள்பேரவை உயர் ஸ்தானிகர்தனது அறிக்கையில் ,அலுவலகம் மற்றும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டஏனைய நடவடிக்கைகள், “பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனையவர்களால் எதிர்பார்க்கப்படும் உறுதியான பெறுபேறுகளை குறைவாக கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்

உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக மனித உரிமைகள் மீதான உறுதியான முன்னேற்றத்தை தொடர்வதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக இலங்கை கூறுகிறது.

‘வலியைத் தாங்க முடியாது’

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது காயமடைந்த தனது 66 வயதான தாய் காணாமல் போய்விட்டதாக அரசாங்க ஊழியரான வலன்ரினா டானியல் என்பவர் தெரிவித்தார்.

2009மே 17, அன்று, அரசாங்கம் வெற்றியைப் பிரகடனப்படுத்தியது அதற்கு ஒரு நாள் முன்பாக , டானியல் தனது தாயை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார் , அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று நம்பினார், ஆனால் அன்று முதல் அவரைப் பற்றி எந்தவொரு வார்த்தையும் இல்லை.

“நான் இந்த வெறுப்பு உணர்வை வளர்த்துக் கொண்டேன், அதனால் நானே என்னைக் கொல்ல முயற்சித்தேன்,” “நான் பல முறை முயற்சித்தேன். இந்த பிரிவின் வலியை என்னால் தாங்க முடியவில்லைஎன்று வலன்ரினா கூறியுள்ளார்

1999 இல் அவரது இளைய சகோதரரும் காணாமல்போயுள்ளார் அதே வேளை அந்த தசாப்தத்தில் ஷெல் தாக்குதல்களில் மூத்தவரும் கொல்லப்பட்டார், அவரது தாயின் விடயத்தை பற்றி அதிகாரிகளுக்கு எழுதியிருந்தார் , அதை அவர்கள் 2011 இல் ஒப்புக்கொண்டனர்.

டானியலுக்கு, 2009 இல் ஷெல் தாக்குதல்களுக்கு பயந்த கஷ்டங்களைத் தவிர, அவர் கிராமம் கிராமமாக உணவு இல்லாமல், உடுத்திய உடைகளுடன் சென்ற, நெருக்கடிகுறைவானதாக இருந்தது

“எங்கள் உறவினர்களைக் கண்டுபிடிப்பது ஒருபோதும் நடக்காது,” என்று அவர் கூறியுள்ளதுடன் அரசாங்கம் செயலற்றதாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் . “இப்போது கூட நான் மிகவும் வேதனையுடன் வாழ்கிறேன்.”என்று அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )