மக்களின் போராட்டம் கலவரமாக வெடிக்கும்

மக்களின் போராட்டம் கலவரமாக வெடிக்கும்

அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தற்போது தணிந்துள்ளதே தவிர முற்றுப் பெறவில்லை.வெகுவிரைவில் மக்கள் போராட்டம் கலவரமாக வெடிக்குமென பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி. எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தம் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய வளங்களை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்தது.ஆனால் தற்போது நெருக்கடியினை முன்னிலைப்படுத்தி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முற்றிலும் விரோதமாக செயற்படுகிறது.

எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்விநியோக கட்டமைப்பு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது,ஆகவே நாட்டில் தற்போது எந்த பிரச்சினைகளும் இல்லை என ஆளும் தரப்பு எம்.பி.க்கள் குறிப்பிடுகின்றனர்..மக்கள் போராட்டம் முற்றுப்பெறவில்லை சற்று தணிவடைந்துள்ளது.

எரிபொருள் , எரிவாயு மற்றும் மின்சார கட்டமைப்பு வழமைக்கு திரும்பவில்லை.நாட்டு மக்களின் பாவனை குறைந்துள்ளது என்பதே உண்மை எரிபொருள் பாவனை 50 சதவீதத்தினாலும்,எரிவாயுவின் பாவனை 40 சதவீதத்தினாலும் மற்றும் மின் பாவனை 20 சதவீதத்தினாலும் குறைவடைந்துள்ளது.இதனால் பொருளாதார வளர்ச்சி வீதம் 10 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

நாட்டு மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை குறைத்துக் கொண்டு நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.மக்கள் போராட்டம் முடிவடையவில்லை.வெகுவிரைவில் மக்கள் போராட்டம் கலவரமாக வெடிக்கும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )