ஆரோக்கிய வாழ்வு

ஆரோக்கிய வாழ்வு

உயிர்  வாழ்வதற்கு உணவு அவசியமானது.நாம் ஆரோக்கியமாக  வாழ்வதில்முக்கிய இடம் வகிப்பது நம் உணவுப்பழக்கமே என்பதில்

எதுவித மாற்றுக் கருத்தும் இல்லை.நமது உடலுக்குத் தேவையாக உள்ள தாதுப்பொருட்களையும் உயிர்ச்சத்துக்களையும் நாம் உணவிலிருந்தேபெற்றுக் கொள்கிறோம்.எனவே ஆரோக்கியமான உணவினை

போதுமான அளவு உட் கொள்வது அவசியமாகிறது.

ஆனால், இன்றைய  நவீன உலகில் நாம் நேரத்தினை மீதப்படுத்தவும்,

ருசிக்காகவும்  துரித  உணவுகளை உட்கொள்கிறோம்.இது நம் உடல் நலத்தினை எவ்வாறுபாதிக்கிறது என்பதைப் பார்க்க  வேண்டிய  அவசியம்இங்கு உள்ளது.

தமிழர் உணவு முறையானது வாழ்வியல் சார்ந்த கலாசாரத்துடன் இணைந்தது. தமிழ்மக்கள் மருந்தாக உணவையே பயன்படுத்தினர்.இதற்கானசான்றுகளை சங்க கால இலக்கியங்களான  பத்துப்பாட்டு,எட்டுத்தொகைபோன்றவற்றில் காணலாம். எந்த  உணவை எந்த  காலங்களில், எப்படி உண்ண  வேண்டும் என எம் வாழ்வியலில் ஒரு வரைமுறை உள்ளது. எமது முன்னோர்கள் வரகு,தினை,சாமை போன்ற

உணவுகளை உண்டுஆரோக்கியமாக  வாழ்ந்தனர்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கம் எனும் போது வயிறு நிறையும்வரை அதை உணவால் இட்டு நிரப்புவதைத் தவிர்த்து,பாதி வயிற்றிற்கு உணவு, கால் பகுதி வயிற்றிற்கு தண்ணீர் அருந்துவதுமீதிப் பகுதியைவெற்றிடமாக விடுவது என்பது அவசியமாகிறது. நாம் எப்படி,எந்த நேரத்தில், எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்கிறோமோ அதுதான் எமது ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது.துரித உணவுகளை உண்பதை தவிர்த்து கீரைவகைகள், காய்க்கறிகள்,தானியங்கள்என்பனவற்றை உண்பதே சாலச் சிறந்ததாகும். உணவு உட்கொண்டதும் தூங்குவதுகூடாது.அத்துடன் கொழுப்புச்சத்துள்ள உணவை அதிகம்உட்கொள்வதை தவிர்த்து நம்ஆரோக்கியத்தைப் பாதிக்காத, சத்தான உணவுகளைஉட் கொள்ளுதல் நோய்நொடியின்றி நீண்டநாள் வாழ வழிசெய்யும்.

இன்றைய கால உணவுப் பழக்கமானது உடல்நலத்திற்கு உகந்ததல்ல. ஏனெனில் நாம் உட் கொள்ளும் பர்கர்,பீட்சா,பரோட்டா போன்ற துரித உணவு வகைகள் மீண்டும் மீண்டும் பசியை தூண்டவல்லன.அத்துடன்இதில் சுவையைக்கூட்டக் கலக்கப்படும் உப்பானது ஆரோக்கியமற்றது. இது பசியைத்தூண்டி மீண்டும் மீண்டும் சாப்பிடும் விருப்பைத் தூண்டிவிடுவதுடன் இந்த இரசாயனக் கலவைகள் உடல் உறுப்புகளையும் பாதித்துவிடும். இதனால் உடல் பருமன் அதிகரித்து,பல பக்க விளைவுகளுடன் கூடிய வாழ்வைத்தந்து,சிறு வயது மரணம்,உயர் ரத்த அழுத்தம்,நீரழிவு,மாரடைப்பு போன்ற பல நோய்களை ஏற்படுத்துகிறது.

எனவே நாம் தினமும்ஆரோக்கியமான உணவைத்தேர்ந்து உண்பதே சாலச்சிறந்தது.தேர்ந்து உண்ணும் உணவே எம் வாழ்வுக்கான ஆரோக்கிய

மருந்தாகும். நாம் சத்தானஉணவுகளை உண்ணும் போது,நம் உடலுக்கு தேவையான  ஊட்டச்சத்துக்கள்  அதிலிருந்து கிடைக்கின்றன. இது நோய்ப் பாதுகாப்புக்குஅருமருந்தாகிறது.

இதனையே  வள்ளுவப் பெருந்தகை தமதுகுறளில் “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்குஅருந்தியது அற்றது  பெற்றது உணின்” எனக் கூறியுள்ளார்.அதாவது நாம் தினமும் உண்ணும் உணவே நம்வாழ்வுக்கான ஆதாரமாகும்.

எனவே, எமது உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றுவதும் தகுந்த உடற்பயிற்சிகள் மூலம் உடலைக் காத்திரமாக வைத்திருப்பதும் வயது வேறுபாடின்றி எம்மை உடல்,உள ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

 -பவானி

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )