பொருளாதாரமும் நம்மவர்நிலையும்

பொருளாதாரமும் நம்மவர்நிலையும்

முடிவற்ற விடியலால்
விண்தொட்டு நிற்கிறது
விலையேற்றம்…..!

சாமி கூட
கண்ணயர்ந்து தூங்கி விட்டது.
நம்மவர் நெஞ்சமெல்லாம்
கல்லாகி கனத்து நிற்கிறது……

அத்தியாவசிய தேவையும்
விலையுயர்ந்து போனது….!
அது தவிர….
பயணத்திற்கு அவசியமான
பெற்றோல் வரண்டு போய்
நம் உறவுகள்
மாலை புலர்ந்தும்,
விடியல்மலர்ந்தும்
வரிசையாய்
தவம் கிடக்கின்றனர்….!

இது போதாதென்று…
ஏழைகளின் சொகுசு வாகனம்
துவிச்சக்கர
வண்டிக்கு கூட
அதிக விலையேற்றம்….!

அலரி மாளிகைக்குள்
நுழைந்த போதுதான்
ஊகிக்க முடிகிறது.
இவ்வளவும்
நம் வியர்வை சிந்திய
வரிப்பணம் என்று…..!

வீழ்ந்து கிடக்கும் நாட்டை
தாங்கிப் பிடிக்க
சிறந்த தலைமை
உருவாகட்டுமே…!!
நம்மவர் துயரங்களும்
துடைத்தெறியட்டுமே….!!

-ஜெ.சிந்துஜா

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )