
திலீபனின் ஊர்திப் பவனி பொத்துவிலில் ஆரம்பம்!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் திலீபனின் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு திலீபனின் உருவப்படம் தாங்கிய பேரணி இன்றையதினம் பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகியது.
குறித்த பேரணி திலீபனின் நினைவேந்தல் வார இறுதி நாளில் யாழ் நல்லூரிலுள்ள திலீபனின் நினைவாலயத்தை வந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்றையதினம் பொத்துவிலில் ஆரம்பமான திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியின் ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் அத்துடன் கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
CATEGORIES செய்திகள்