
பிரபாகரனின் பிறந்தநாளில் உரும்பிராயில் சிவகுமாரன் சிலையடியில்72 பிடியரிசி இட்டு சிறப்புப் பொங்கல் ; கேக் வெட்டியும் கொண்டாட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நேற்று வியாழக்கிழமை (26) யாழ்ப்பாணம் உரும்பிராயில் அமைந்துள்ள தியாகி பொன்.சிவகுமாரனின் உருவச் சிலையடியில் பொங்கல் பொங்கி, கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
மேற்படி நிகழ்வில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், உபதவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனன் மற்றும் சபை உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜர் காண்டீபன், கட்சியின் கோப்பாய்த் தொகுதி அமைப்பாளர் பரமானந்தம் பிரகலாதன், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், வீதியால் பயணித்த பொதுமக்கள், மாணவர்களுக்கும் கேக், பொங்கல் என்பன பரிமாறப்பட்டன.
CATEGORIES செய்திகள்

