பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு கதவடைத்து 3 ஆபத்தான சட்டங்களுக்கு கதவுகளைத் திறக்கும் அரசு

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு கதவடைத்து 3 ஆபத்தான சட்டங்களுக்கு கதவுகளைத் திறக்கும் அரசு

அரசாங்கம் பழைய பயங்கரவாத சட்டத்துக்கு கதவடைத்து, புதிய 3 சட்டங்கள் ஊடாக அந்த கதவுகளை திறக்கப்போகிறதா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.அரசாங்கம் கொண்டுவரப்போகும் புதிய சட்டங்களால் இளைஞர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படப்போகிறது.என எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவும் எம்.பி.யுமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்ட ஊடகங்களுக்கு முடியாது என்றால், மக்களின் துயரங்களை வெளிப்படுத்த முடியாது என்றால் அது அபிவிருத்தியடைந்த ஜனநாயகம் அல்ல.அரசாங்கம் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கிறது. இணையவழி பாதுகாப்பு சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை.

எனவே அரசாங்கம் பழைய பயங்கரவாத சட்டத்துக்கு கதவடைத்து, புதிய 3 சட்டங்கள் ஊடாக அந்த கதவுகளை திறக்கப்போகிறதா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று தற்போதுள்ள இளைஞர்களின் சிந்தனைகள் செயற்பாடுகள் வித்தியாசமானவை . . அவர்கள் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். யாராவது தவறு செய்தால், அதனை அச்சமின்றி சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவார்கள். அரசாங்கம் கொண்டுவரப்போகும் புதிய சட்டங்களால் இளைஞர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படப்போகிறது.

மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் பாரியளவில் பேசப்பட்டு வருகிறது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த சட்டமூலம் தொடர்பில் கடுமையாக விமர்சித்திருக்கிறது. அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை கூட்டிக்காட்டியுள்ளது . அதேபோன்று பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூகத்தினர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். குறிப்பாக தடுத்துவைப்பு, ஒன்றுகூடும் சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் தொடர்பில் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். சர்வதேச அமைப்புகள் பல இந்த சட்டத்தினால் ஊடக சுதந்திரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, அதனை விமர்சித்திருக்கின்றன. அதனால் அரசாங்கம் இந்த சட்டங்களை கொண்டுவந்து, குற்றச்செயல்களை வெளிப்படுத்தும் ஊடகங்களை பலவீனப்படுத்தக்கூடாது.

எனவே ஊடக செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இணையவழி பாதுகாப்பு சட்டம் மற்றும் ஓழுங்கமைக்கப்பட்ட சட்டமூலங்கள் தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். ஊடகவியலாளர்கள் அச்சமின்றி தகவல்களை அறிக்கையிடும் சுதந்திரத்தில் அரசாங்கம் கைவைக்க வேண்டாம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )