புலம்பெயர் அமைப்புகள் தடை; பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவித்தல்

புலம்பெயர் அமைப்புகள் தடை; பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவித்தல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆறு புலம் பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது என உத்தியோப்பூர்வ அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது;

அதன்படி, அவுஸ்திரேலிய தமிழர் பேரவை – உலகத் தமிழர் பேரவை – உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு – திராவிட ஈழ மக்கள் கூட்டமைப்பு – கனடியத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுக்கான தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 316 தனிநபர்களுக்கு எதிரான தடையையும் இலங்கை நீக்கியுள்ளது.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 மாநாட்டின் கீழ், தற்போது கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட குறித்த ஆறு அமைப்புகளின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இந்த அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பரிந்துரைகளுக்கு அமைய ,கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முழுமையான விபரங்களுக்கு: http://www.documents.gov.lk/files/egz/2022/8/2291-02_T.pdf

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (3 )