சூத்திரதாரியை தெரியும் என்ற மைத்திரியை உடன் கைது செய்யவும் !

சூத்திரதாரியை தெரியும் என்ற மைத்திரியை உடன் கைது செய்யவும் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சூத்திரதாரியை அறிவேன் என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய வலுச் சக்தி ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளரான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது ஆனந்த பாலித மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்தார். இதனை அனைவரும் அறிவார்கள். அந்த நிகழ்வுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் எம்.பிக்கள் இருவரும் சென்றிருந்தனர். இவ்வாறிருக்கையில் ஏன் சஜித் பிரேமதாசவை மட்டும் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்.

எவ்வாறாயினும் கட்சியின் மத்திய செயற்குழுவில் எவரும் எங்கும் போகக் கூடாது என்று தீர்மானிக்கப்படவில்லை. இதனால் அந்த நிகழ்வுக்கு செல்வதில் பிரச்சினை இருக்கின்றதா? எனக்கும் அழைப்பு கிடைத்தது. என்னால் போக முடியாமல் போனது. பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டும் என்றுதான் நாங்களும் கூறுகின்றோம். பிரதான சூத்திரதாரி யார் என்று தெரியும் என்றும், என்னிடம் கேட்டால் கூறுவேன் என்று கூறிய மைத்திரிபால சிறிசேனவும் அந்த நிகழ்வில் இருந்தார். ஏன் அவரை கைது செய்யவில்லை. உடனடியாக அவரை கைது செய்ய வேண்டுமல்லவா? ஏன் அதனை செய்யவில்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )