
முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவிடம் விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இடம்பெறும் விசாரணையொன்று தொடர்பில் அவர் அங்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2010 முதல் 2015 வரையிலான காலப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கோதாபய ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில் கொழும்பை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் தொகுதியொன்றில் வீடுகள் சில சட்டவிரோதமான முறையில் பல்வேறு தரப்பினருக்கு வழங்கியுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே கோதாபய ராஜபக்ஷவிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், முன்னாள் பிரதம நீதியரசரும் மற்றும் முன்னாள் சட்டமா அதிபருமான மொஹான் பீரிஸும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்ககுழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

