
கோத்தபாய நாடு திரும்பினால் தண்டனை வழங்க வேண்டும்; ஜே.வி.பி.தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக சட்டத்தை செயற்படுத்தி அவருக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில், வெள்ளிக்கிழமை ஜே.வி.பி தலைமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அந்தக் கட்சியின் பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத்தே இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் விஜித ஹேரம் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது கோத்தபாய ராஜபக்ச சாதாரண பிரஜை . அதன்படி அவருக்கு இலங்கைக்கு வருவதற்கான உரிமை உள்ளது. ஆனால் அவர் தற்போது ஜனாதிபதி அல்ல என்பதனால், ஜனாதிபதிக்கு இருந்த சிறப்பு வசதிகளில் இருந்து அவர் விடுபட்டவராகவே இருப்பார். இதனால் அவருக்கு எதிரான வழக்குகளை மீள ஆரம்பிக்க வேண்டும்.
இதேவேளை அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை தொடர்பில் உடனடியாக சட்டத்தை செயற்படுத்தி அவருக்கு உரிய தண்டனைகளை வழங்க வேண்டும் என்றார்.

