
முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் எந்த நேரத்திலும் அரசாங்கம் கவிழ்க்கப்படும்! – நாமல் தெரிவிப்பு!
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக 1965ஆம் ரோஹண விஜயவீரவினால் ஜேவிபி என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரே இலங்கை என்ற, நாடு வீழ்ச்சியடைய தொடங்கியதாக இன்றைய கூட்டத்தில் தெரிக்கப்பட்டிருந்து. அத்துடன் புதிய தலைமையிலான அரசாங்கம் ஒன்றின் தேவையை, மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக இதன்போது கருத்து வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து நுகேகொடையில் முன்னெடுத்த அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக எந்த பயமும் இல்லாமல் நாட்டிலே கலைஞர்கள், தொழிற்சங்கத்தினர், வைத்தியர்கள், தாதியர்கள், விவசாயிகள் போன்று இன்றைய மக்கள் பேரணிக்கு ஒன்றிணைந்த உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
அனைவரும் கேட்கிறார்கள் எதற்காக இவ்வளவு அவசரமாக ஒரு பேரணி என்று இது எங்களின் சுயநலனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி அல்ல மக்களின் தேவைக்காக ஏற்பாடு செய்யப்ட்ட மக்கள் ஒன்று கூடல் உங்களுக்கான என்றும் எந்த தருணத்திலும் நாங்கள் களத்தில் இறங்குவோம் என்று மக்களுக்கு கூறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரணி இது.
பல பொய்களை கூறினார்கள், தொடர்ச்சியாக பொய்களை கூறினார்கள், ஐஎம் எப்யை வெளியேற்றுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் வந்தவுடன் அவர்களை அரவணைத்துக்கொண்டார்கள்.
சதாரண மக்கக்கு வரிகளை விதித்து இன்று மக்களிடம் கூறிய அனைத்தையும் மறந்து விவாசாயிகளை வீதிக்கு கொண்டுவந்த அரசாங்கம் இது, தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதாக கூறி வந்தவர்கள் தினந்தோரும் தொழில்பேட்டைகளை மூடுகிறார்கள், கல்விமுறையை இல்லாமல் செய்ய முயற்சிக்கும் ஒரு அரசாங்கம் .
அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மறந்து தற்போது ஆட்சியமைத்து வருகிறது, அவர்கள் கூறிய வாக்குறுதிகளை நினைவுகூரவே நாங்கள் கூடியுள்ளோம் தயவு செய்து பொய்கள் கூறுவதை நிறுத்தி விடுங்கள். பொதுமக்களுக்காக சேவை செய்ய ஆரம்பியுங்கள்.
நீதித்துறையை அரசாங்கம் அச்சுறுத்தி வருகிறது. பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் அச்சுறுத்தல் விடுத்து வருகிறது.
அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்காமல் மக்களுக்காக சேவை செய்யுமாறு, அரசாங்க பணியாளர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
மக்களுக்கு வழங்கிய உறுதிகளை வழங்க முடியாது விடின், பாதுகாப்பு படைகளை அதற்கு காரணமாக பயன்படுத்தாதீர்கள்.
அன்று விவசாயிகளுடன் வயலுக்கு இறங்கியவர்கள் இன்று விவசாயிகளை ஏமாற்றியுள்ளார்கள்.
வரலாற்றில் முதல் தடவையாக உள்ளுர் உற்பத்திகளை விடவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது சிறந்தது எனக் கூறும் அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது.
அரிசி மாஃபியாவை நிறுத்துவதாகக் கூறிய அரசாங்கம் அதற்கு தீர்வு வழங்கவில்லை. போதைப்பொருள் ஒழிப்பிற்கு நாங்கள் ஒன்றும் விரோதமானவர்கள் அல்ல. எனினும் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலகன் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பியுங்கள். என நினைவுகூர விரும்புகின்றோம்.
பொய் கூறுவதை நிறுத்திவிட்டு முறையாக மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்காவிடின் எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தாயாராக இருக்கிறோம்.

