இலங்கை தொடர்பான கொள்கை; ராஜீவை ஏமாற்றிய இந்திய இராணுவம்

இலங்கை தொடர்பான கொள்கை; ராஜீவை ஏமாற்றிய இந்திய இராணுவம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின், இலங்கை தொடர்பான கொள்கையின் சரிவுக்கு இந்திய இராணுவமே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மணி சங்கர் ஐயர் இந்த குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

ராஜிவ் காந்தியை பொறுத்தவரை, அவர், இந்தியாவின் மற்றும் இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதில் உறுதியாக இருந்தார்.

எனினும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின், இலங்கை தொடர்பான பின்னடைவுக்கு, இராணுவம் தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், இலங்கை பிளவுபடுவதைத் தடுக்கவும், தமிழ்நாட்டில் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டக்கூடிய எந்தவொரு தாக்கத்தையும் தடுக்கவும், 1987 ஒப்பந்தத்தையும் இந்திய அமைதிப் படையை அனுப்பும் முடிவையும் மணி சங்கர் ஐயர் ஆதரித்துள்ளார்.

இலங்கையின் சிதைவு, இந்தியாவில் சிதைவை ஏற்படுத்தும் என்பதையும் ராஜீவ் அறிந்திருந்தார், என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இந்திய இராணுவம் அவரை ஏமாற்றியது, இந்திய உளவுத்துறை அவரை ஏமாற்றியது என்று மணி சங்கர் ஐயர் குற்றம் சுமத்தினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )