
கூட்டு அரசியல் பயணத்திற்காக ஒன்றினையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி
ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) இணைந்து கூட்டு அரசியல் திட்டத்தைத் தொடங்குவதற்கான முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) செயற்குழு ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.
இந்த முடிவை அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவும் நிர்வாகக் குழுவும் ஒரு பொதுவான கொள்கை கட்டமைப்பில் இணைந்து பணியாற்றுவதற்கான கூட்டு உடன்பாட்டை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டையும் அதன் மக்களையும் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு நடைமுறை, தீர்வுகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒத்துழைக்க செயற்குழு முதல் முறையாக ஒரு வரலாற்று முடிவை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மேலும், சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்கிறார் என்றும், தலைமைத்துவம் குறித்து எந்த சர்ச்சையும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த ஒன்றுபட்ட அரசியல் பயணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமட்ட உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.