திருமலையில் 5 மாணவர்கள் கொலை; நீதி கோரிய தந்தை உயிரிழப்பு.!

திருமலையில் 5 மாணவர்கள் கொலை; நீதி கோரிய தந்தை உயிரிழப்பு.!

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி, திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்தார்.

ரஜீகர் மனோகரன் என்ற மாணவனின் படுகொலைக்கு நீதி கோரிப் போராடி வந்த, அவரின் தந்தையான வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் (வயது 84) என்பவரே, எவ்வித நீதியும் கிடைக்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அரச பயங்கரவாதத்தில் கொல்லப்பட்ட ரஜீகர் மனோகரனின் பிறந்தநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமையாகும். மகனின் பிறந்த தினத்திலேயே, அவருக்கு நீதி கோரி வந்த தந்தை காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )