
ஒன்றுமில்லாத அரசே இது; மகிந்த சாடல்
தற்போதைய அரசாங்கம் எவ்வித வேலையும் செய்யாத அரசாங்கமாக இருக்கின்றது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தனவின் பிறந்த தினத்தையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை ரோகிதவின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தி தொடர்பில் உங்களின் கருத்து என்ன என்று ஊடகவியலாளர்களால் மகிந்த ராஜபக்ஸவிடம் கேட்கப்பட்டது.
இதன்போது பதிலளித்த அவர், ‘’அரசாங்கம் ஒன்றுமில்லாத அரசாங்கமாகியுள்ளது. எந்த வேலைகளையும் செய்வதில்லை’’ என கூறியுள்ளார்.