
துப்பாக்கியை காட்டி மக்களை அச்சுறுத்திய வனவளத் திணைக்கள அதிகாரி..!
வவுனியா – ஓமந்தை, கொந்தக்காரன்குளம் பகுதியில் தமிழ் மக்களின் காணிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி பொய் கூறி, அது வனவளத் திணைக்களத்தின் காணி என்று அச்சுறுத்த முற்பட்டபோது மக்கள் முரண்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து RFO தர அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி தமிழ் மக்களை அச்சுறுத்தும் காட்சிகள் தற்போது வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கியை காட்டி மிரட்ட முற்பட்ட குறித்த RFO தர அதிகாரி இன்று சில இளைஞர்களுடன் முரண்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

