அடுத்து சிறைக்குச் செல்பவர்கள் யார்?; எதிர்பார்ப்புடன் இருக்கும் மக்கள்

அடுத்து சிறைக்குச் செல்பவர்கள் யார்?; எதிர்பார்ப்புடன் இருக்கும் மக்கள்

அடுத்ததாக சிறைக்குச் செல்பவர்கள் யார்? என்பதனை அறிய ஒவ்வொரு நாளும் விசேட செய்திகளை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையினை எமது அரசாங்கத்தின் ஆட்சியின் மூலம்ஏற்படுத்தி வருகின்றோம் என தேசியமாக்கல் சக்தியின் எம் ,.பி.யான் கந்தசாமி பிரபு தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கம்பெனிகள் திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இலங்கையின் கடந்த ஆட்சிக்காலங்களில் கரைபுரண்டு போயுள்ள ஊழல், மோசடி, கறுப்பு பணம் தூய்மையாக்கல் மற்றும் பயங்கரவாதம், இனவாதம் மற்றும் மதவாதங்களை தூண்டுவதற்கு நிதியளிப்பதனைத் தடுக்கும் செயன்முறைக்குத் தேவையான வசதிகளையும் திட்டமிட்டு தடுப்பதன் ஒரு நோக்கமாகவும் குறித்த கம்பனிகள் சட்டத்திருத்ததினை எமது அரசாங்கம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது.

எமது நாட்டில்,தனிநபரின் சராசரி வருமானத்திற்கு மேல் ஒவ்வொரு குடிமகனும் கடன்கார மக்களாக காணப்படுவதும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் எமது நாட்டில் கடன்காரர்களாகவே பிறக்கின்றனர்.

இந்த நிலையினை கடந்த வருடங்களாக நாட்டினை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டின் சட்டம் மற்றும் நீதித்துறையினையும் சேர்த்து தமது தேவைக்காகவும் தமது பங்காளிகளின் தேவைக்காவும் நாட்டை ஆட்சி செய்ததன் செயற்பாடே இதற்கான முழுக்காரணமாக காணப்படுகின்றது.கடந்த காலங்களில் எமது நாட்டின் பொருளாதாரம் வங்குறோத்து நிலையினை எதிர்கொண்டதற்கும் நாட்டில் நடைமுறையில் இருந்த ஊழல் மோசடிகளுடன் கூடிய ஆட்சியே காரணம்.

கடந்த ஆட்சியின் மத்திய வங்கியின் ஆளுனர் தொடக்கம் நிதிஅமைச்சர்,அமைச்சரவை இதற்கு குற்றவாளிகளாகவும் பெயரிடப்பட்டு அதற்கான விசாரணைகளும் தற்பொழுது உள்ளது.இவற்றிற்கு உரிய நீதியினை வழங்குவதங்கும் நாட்டின் வலுவான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் அதில் எமது அராங்கம் உறுதியாகவும் உள்ளது.

எமது அரசாங்கத்தின் தற்போதைய ஆட்சியில் நீதித்துறை,பாதுகாப்பு மற்றும் பொதுத்துறைகள் என்பன மிகவும் சுயாதீனமாகவும் மக்கள் மத்தியிலும் சர்வதேச மட்டத்திலும் மிகவும் ணக்கூடியதாகவுள்ளது. வினைத்திறமையுடன் செயற்படுவதனை

கடந்த ஆறு மாதங்களில் அதிகளவான இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த காலத்தின் அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்கள் அவர்களின் உறவினர்கள் அவர்களுடன் இணைவாகச் செயற்பட்ட அரச அதிகாரிகள் தொடக்கம் நீதிமன்றங்களின் ஊடாக தண்டனைகளைப் பெற்று சிறைச்சாலைகளில் உள்ளனர்.

அடுத்ததாக சிறைக்குச் செல்பவர்கள் யார் என்று அறிய மக்கள்,ஒவ்வொரு நாளும் விசேட செய்திகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையினையும் எமது அரசாங்கத்தின் ஆட்சியின் மூலம்ஏற்படுத்தி வருகின்றோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலிலும் ஊழல் மோசடிகளை அதிகார துஸ்பிரயோகங்களை மேற்கொண்டவர்கள், அதற்கு துணைபோனவர்கள் அனைவரும் தற்பொழுது எமது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை விமர்சிப்பவர்களாகவும் எமது அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்கிவருவதனை ஊடங்களில் அறிக்கை அரசியலினை மேற்கொள்வதனை தவிர்த்து கொள்வது பொருத்தமானதாக அமையும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )