உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டி; இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்த 90 வயது வீராங்கனை

உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டி; இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்த 90 வயது வீராங்கனை

உலக மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிகளில் இந்திய, ஹரியானாவைச் சேர்ந்த 94 வயதான பகவானி தேவி என்ற பெண், 1 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

பின்லாந்தில் நடந்த ‘உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப்’ போட்டியில் இந்தியாவிற்காக விளையாடிய ஹரியானாவைச் சேர்ந்த பகவானி தேவி, தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் வென்று, 94 வயதில் உலகிற்கே ஒரு உத்வேகம் அளித்துள்ளார்.

பின்லாந்தின் தம்பேரில் நேற்று முன் தினம் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் பகவானி 24.74 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

இது தவிர குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

இந்தநிலையில் புதுடில்லி விமானநிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக அவர் புதுடில்லி மாநில தடகள செம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டம், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

அதனை தொடர்ந்து சென்னையில் நடந்த தேசிய மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப்பில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார்.

இதன் மூலம் உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பாக விளையாட தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )