சஜித் – நாமல் இணைந்து ஆட்சியமைப்பது கொழும்பு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி

சஜித் – நாமல் இணைந்து ஆட்சியமைப்பது கொழும்பு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி

கொழும்பு மாநகரசபையில் சஜித், நாமல் இணைந்து ஆட்சியமைப்பதாகக் கூறினால் அது கொழும்பு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தம்புத்தேகம வைத்தியசாலை வளாகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கியிருக்கின்றனர். எமது குழுக்களையே நாம் தேர்தலில் களமிறக்கியிருந்தோம்.

வெவ்வேறு கொள்கைகள், வெவ்வேறு வேலைத்திட்டங்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன என ஒவ்வொரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன.

அந்த வகையில் கொழும்பு மாநகரசபையில் ஆட்சிமைப்பதற்கான மக்கள் ஆணை எமக்கே கிடைத்திருக்கிறது.

எனவே கொழும்பு மாநகரசபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

எனவே சஜித், நாமல் போன்றோர் இணைந்து கொழும்பில் ஆட்சியமைப்பதாகக் கூறினால் அது கொழும்பு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )