நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டா

நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று புதன்கிழமை அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறி மாலைதீவுக்கு சென்றுள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 1.45 அளவில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான அண்டோனோ 32 ரக விமானத்தில், ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியுடன், அவரது பாரியாரும், அவர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளதாக தகவல்களை மேற்கோள்காட்டி பிபிசி தெரிவித்துள்ளது.

எனினும், அது குறித்து இதுவரையில் தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )